ETV Bharat / state

“வைரமுத்துவின் கருத்தை ஆதரிக்கிறேன்” - வைகோ பேட்டி - நீதிமன்றங்களில் தமிழ் மொழி குறித்து வைகோ

Vaiko's opinion on tamil language in courts: தமிழக நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிடுவதோ தீர்ப்பு வழங்குவதோ இல்லை என்பது கொடுமை என வைரமுத்து கூறிய கருத்தை தான் ஆதரிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்தை ஆதரிக்கிறேன் - எம்‌.பி‌ வைகோ

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 12:17 PM IST

கவிப்பேரரசு வைரமுத்துவின் கருத்தை ஆதரிக்கிறேன் - எம்‌.பி‌ வைகோ

தூத்துக்குடி: இந்திய சுதந்திர போராட்ட வீரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் 224வது‌ நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு ஸ்தூபி மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: 321 நாட்களாக தொடரும் போராட்டம்; அமைச்சர் அன்பில் மகேஷ் காரை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றென்றைக்கும் ஓங்கி ஒலித்து இருக்கும். எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைத்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன்” என்றார்.

சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது தனக்கு தெரியாது என பதிலளித்தார். தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழ் மொழியில் வாதிடுவதோ, தீர்ப்புகள் வழங்கப்படுவதோ இல்லை என்பது கொடுமை என வைரமுத்து பேசியது தொடர்பாக கேட்கையில், வைரமுத்து பேசிய கருத்தினை தான் ஆதரிப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: சமாதானத் திட்டம் நிறைவேற்றம்; வணிகர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா - விக்கிரமராஜா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.