தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் தவசிப்பெருமாள் தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டிற்கு, நேற்று காலை (செப். 29) கருப்பசாமி (45) என்பவர் தனது மனைவி சண்முகலெட்சுமியுடன் (40) வாடகைக்கு குடியேறியுள்ளார்.
இந்நிலையில் இன்று (செப்.30) சண்முகலெட்சுமி, பூட்டிய வீட்டிற்குள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கணவர், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கருப்பசாமி மனைவி சண்முகலெட்சுமி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் சம்பவ இடத்தை சோதனைசெய்தனர். இதையடுத்து, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைதுசெய்ய, காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவை தட்டிக்கேட்ட பெண் கொலை: இருவர் கைது!