இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று தூத்துக்குடிக்கு சென்றார். வேம்படி இசக்கியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதற்கு எதிராக போராடி வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புத்தி வரவேண்டுமென வேண்டியும் கோயிலில் 101 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பொய் பரப்புரை செய்யும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்கவேண்டும் என 101 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தோம். ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்ததினத்தை மதுவிலக்கு தினமாக அறிவித்து மதுகடைகளை மூடவேண்டும் என்றார்.
தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியில் சாதியை சித்தரித்து காமராஜர் படத்தை போடுவது கண்டனத்திற்குரியது" என்றார்.
மேலும், நெல்லை கண்ணன் நாக்கை அறுப்போம் என்று போஸ்டர் ஒட்டிய விவகார வழக்கை சட்ட பூர்வமாக சந்திப்போம் என்றார்.
இதையும் படிங்க: நாட்டுக்கு வழிகாட்டும் மாணவி ஆஸ்தா!