ETV Bharat / state

வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் - தூத்துக்குடியில் மழை

தூத்துக்குடியில் நேற்றிரவு (அக்.26) இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

மழை
மழை
author img

By

Published : Oct 27, 2021, 9:30 AM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மாவட்டங்களின் பல பகுதியில் கனமழை பெய்துவருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்துவந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகக் குளிர்ந்த சீர்தோஷ்ண நிலை நிலவி வந்தது.

இந்த மாவட்டத்தின் நீர்பிடிப்பு பகுதிகளான ஸ்ரீ வைகுண்டம், கயத்தாறு, திருச்செந்தூர், ஆலந்தலை, சாத்தான்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துவந்தது.

இந்நிலையில் நேற்று (அக்.26) மாவட்டத்தில் இரவு 9.30 மணிக்குப் பெய்ய தொடங்கிய கனமழை, சுமார் 2 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

வெளுத்து வாங்கிய மழை

தூத்துக்குடி மாநகர் பகுதியின் முக்கிய சாலையான தமிழ் சாலை, வஉசி சாலை, கிரேட் காட்டன் ரோடு, விஇரோடு, தேவர்புரம் சாலை, பிரையண்ட் நகர், அண்ணாநகர், மரகுடி தெரு, ஸ்னோஸ் காலனி, தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

மழை நீர் தேங்கிய பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மாநகராட்சியின் சார்பில் ராட்சத மோட்டார்கள் பொருத்தப்பட்டுக் குடியிருப்புகளுக்குள் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 9 மாவட்டங்களில் கனமழை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.