ETV Bharat / state

கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர் - தண்ணீரை அப்புறப்படுத்த கோரிக்கை

author img

By

Published : Dec 1, 2019, 5:19 PM IST

தூத்துக்குடி: கனமழைக் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

heavy-rain-affected-people-living-place-in-thoothukudi

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டின் தென்கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. கனமழை எச்சரிக்கையையொட்டி வானிலை ஆய்வுமையம் "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளதைத்தொடர்ந்து, மீனவர்கள் யாரும் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் முதல் ஆலந்தலை வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

தொடரும் கனமழையால் வெள்ளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி நகர், கதிர்வேல் நகர், கலைஞர் நகர், பொன்சுப்பையா நகர், புனித மேரிஸ் காலனி, அன்னை தெரசா நகர் உள்பட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைவெள்ளம் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழை காரணமாக எங்கள் பகுதி மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்பதால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். தேங்கிநிற்கும் தண்ணீரை வெளியேற்ற கோரி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை சரியாக கட்டி வருகிறோம்.

ஆனால் முறையான மழைநீர் வடிகால் அமைத்து தருவதற்கு மாநகராட்சி அலுவலர்கள் முன்வரவில்லை. அரசியல்வாதிகளும் ஓட்டு கேட்பதற்காக மட்டுமே எங்களது பகுதிக்கு வந்து செல்கின்றனர். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் யாரும் வந்து எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

தேங்கி நிற்கும் மழை நீரால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீரில் உருவாகும் கொசுப்புழு, கிருமிகள் போன்றவை காலில் அரிப்பையும், குழந்தைகளுக்கு பல்வேறு நோய் உபாதைதைகளையும் ஏற்படுத்துகிறது. இதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதையும் படிங்க: ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளம் முன்பு செல்ஃபி எடுத்த இளைஞர்கள்!

Intro:தூத்துக்குடியில் தொடரும் கனமழையால் பொதுமக்கள் அவதி: தேங்கிய மழைவெள்ளத்தை வெளியேற்றக்கோரி மக்கள் ஆவேசம்
Body:

தூத்துக்குடி

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையையொட்டி வானிலை ஆய்வு மையம் "ஆரஞ்சு அலர்ட்" விடுத்துள்ளதைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் முதல் ஆலந்தலை வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி நகர், கதிர்வேல் நகர், கலைஞர் நகர், பொன்சுப்பையா நகர், புனித மேரிஸ் காலனி, அன்னை தெரசா நகர் உள்பட மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக எங்கள் பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்பதால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். தேங்கிநிற்கும் தண்ணீரை வெளியேற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சிக்கு சொத்துவரி குடிநீர் வரி உள்ளிட்டவற்றை சரியாக கட்டி வருகிறோம். ஆனால் தரமான தார்சாலை அமைத்து மழைநீர் வடிகால் அமைத்து தருவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை செய்யவில்லை. அரசியல்வாதிகளும் ஓட்டு கேட்பதற்காக மட்டுமே எங்களது பகுதிக்கு வந்து செல்கின்றனர். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தநேரத்தில் யாரும் வந்து எங்களுக்கு உதவ முன்வரவில்லை. தேங்கி நிற்கும் மழை நீரால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும், வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீரில் உருவாகும் கொசுப்புழு, கிருமிகள் போன்றவை காலில் அரிப்பையும் ஊழலையும் ஏற்படுத்துகிறது. இதனால் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியலில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு நிலை இல்லை என்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.