ETV Bharat / state

'மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர்' - தமிழில் பேசி அசத்திய ஆளுநர்! - banwarilal purohit attent bharathiyar funtion

தூத்துக்குடி: மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் பாரதி என்று தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதியார் விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

bharathiyar birthday
bharathiyar birthday
author img

By

Published : Dec 11, 2019, 8:28 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 138ஆவது நாள் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தினசரி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பாரதியாருக்கு மரியாதை செலுத்திய பன்வாரிலால் புரோகித்
பாரதியாருக்கு மரியாதை செலுத்திய பன்வாரிலால் புரோகித்

இதனையடுத்து மணி மண்டபம் அருகே நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு, மகாகவி பாரதியார் விருது மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி சிறப்பித்தார்.

இதன் பின்னர் நிகழ்ச்சியில் 'அனைவருக்கும் வணக்கம், தமிழ் இனிமையான மொழி' எனத் தமிழில் பேசி, தனது உரையைத் தொடங்கிய பன்வாரிலால், 'தமிழில் பேச முயற்சி செய்து வருகிறேன். இன்னும் மூன்று ஆண்டுகள் இங்குதான் இருப்பேன். அதற்குள் தமிழ் கற்று விடுவேன். மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர். கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி ஒரு பத்திரிகையாளர்.

பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பிய பாரதி, ஆணுக்கு பெண் நிகரானவர் என்று கற்பித்தார். நான் பாரதியையும், அவர் பிறந்த எட்டயபுரத்தினையும் வணங்குகிறேன்' என்றார்.

தமிழில் பேசி அசத்திய ஆளுநர்

'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி, இவ்வையகம் தழைக்குமாம். எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்' ஆகிய கவிஞர் பாரதியின் வரிகளை தமிழில் மேற்கோளாகப் பேசிக் காட்டினார், ஆளுநர். இதற்கு அப்பகுதியில் உற்சாகக் குரல்கள் எழும்பின.

இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களை வேண்டுமென்றே மசோதாவிலிருந்து நீக்கியுள்ளார்கள் - வைகோ குற்றச்சாட்டு

Intro:மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Body:மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார்.

மகாகவி பாரதியார் பன்முகத் தன்மை கொண்டவர் என்றும், பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியவர் பாரதி என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் 138வது நாள் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் தினசரி நாளிதழ் (தினமணி) சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து மணி மண்டபம் அருகே நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதி ஆய்வாளர் இளசை மணியனுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மகாகவி பாரதியார் விருது மற்றும் ரூ 1லட்சம் வழங்கினர்.

இதன் பின்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனைவருக்கும் வணக்கம், தமிழ் இனிமையான மொழி தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில் தமிழில் பேச முயற்சி செய்து வருகிறேன். இன்னும் மூன்று ஆண்டுகள் எங்குதான் இருப்பின் அதற்குள்ளாக தமிழ் கற்று விடுவேன்,மகாகவி பாரதியார் பன்முகத்தன்மை கொண்டவர்,கவிஞர், சுதந்திர போராட்ட வீரர், பெண் விடுதலை பற்றி பேசிய பாரதி ஒரு பத்திரிகையாளர்,பெண்ணுரிமை , பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பிய பாரதி, ஆணும் பெண்ணும் நிகரன கொள்தல் என ஆணுக்கு பெண் நிகர் என்றார், நான் பாரதியையும், அவர் பிறந்த எட்டயபுரத்தினை வணங்குகிறேன் என்றார்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகையில் மகாகவி பாரதியாரின் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்,எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை நினைத்தல் வேண்டும் ஆகி வரிகளை தமிழில்பேசி மேற்கோள் காட்டினார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.