தூத்துக்குடி: புதுக்கோட்டை தாலுகா ஆலங்குளம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் மாரியப்பன் என்பவரது மகன் நாகரத்தினம் (வயது 47). இவர் கோவில்பட்டியில் நோய் தடுப்பு பொது சுகாதார துணை இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நாகரத்தினம் தனது இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து நாகரத்தினம் மீது மோதி ஏறி இறங்கியது. இதில் நாகரத்தினம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்தில் நிறுத்தாமல் பேருந்தை கிழக்கு காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்று சரணடைந்து விபத்து குறித்து தெரிவித்தார். உடனடியாக கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நகரத்தினம் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதியை ஒருமையில் திட்டியதாக முன்னாள் பாஜக பிரமுகர் கைது!