வெளி மாநிலங்களில் வசித்து வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு ஆங்காங்கே உள்ள கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் எட்டுப் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், கடந்த 17ஆம் தேதி மும்பையில் இருந்து கயத்தாறு வந்த 5 பேர் கோவில்பட்டி தனியார் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் 5 பேருக்கும் இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மும்பையிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வந்த 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவர்கள் 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் நீடிக்குமா?
மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 8 பேருக்கு கரோனா தொற்று - Corona for 8 people who came to Kovilpatti from Mumbai
தூத்துக்குடி: மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 3 மாத குழந்தை உள்பட எட்டுப் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
![மும்பையிலிருந்து கோவில்பட்டி வந்த 8 பேருக்கு கரோனா தொற்று குழந்தை உட்பட 8 பேருக்கு கரோனா தொற்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7279655-thumbnail-3x2-tut.jpg?imwidth=3840)