ETV Bharat / state

"திமுக விரைவில் குப்பை மேட்டிற்கு வரும்" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ! - Kadampur Raju

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக கோபுரத்திற்கு சென்றதாகவும்; விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ
author img

By

Published : Jan 26, 2023, 5:17 PM IST

திமுக விரைவில் குப்பை மேட்டிற்கு வரும்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஒட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அடுத்த புதியம்புத்தூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்தில் முன்னாள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கடம்பூர் ராஜூ, "திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து கோபுரத்திற்கு போனாலும் நாளை குப்பைமேட்டிற்கு போவது உறுதி. தமிழ், தமிழ் என்று பிழைப்புக்காக சொல்வது திமுக, ஆனால் தமிழ் என்று உணர்வோடு நிற்பது அதிமுக மட்டுமே. திமுக 500-க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 'ஸ்டாலின்தான் வராரு' 'விடியல் தர போறாரு' எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்.

வாரிசு படத்திற்கு வாரிசால் பிரச்னை வந்தது. அந்த வாரிசுக்கு தற்போது அமைச்சர் பதவி, அதிமுகவில் வாரிசுக்கு இடமில்லை. தொண்டர்களுக்கு தான் பதவி. ஒரு தொண்டர் தான் முதலமைச்சராக முடியும் என்பது நிரூபித்து காட்டியது அதிமுக' என்று கூறினார்.

இதையும் படிங்க: விஐபி வரிசையில் சீட் இல்லை.. குடியரசு தின விழாவை புறக்கணித்த எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.