ETV Bharat / state

மாயமான மீனவர்கள் உயிருடன் மீட்பு

தூத்துக்குடி: கடலில் மாயமான மீனவர்கள் 48 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீனவர்கள்
மீனவர்கள்
author img

By

Published : Jul 21, 2021, 11:59 PM IST

தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவர், சக மீனவர்களான பெரியதாழையை சேர்ந்த ஜான்பால் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 19ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். ஆனால், நடுக்கடலில் படகு என்ஜின் பழுதானதால் கரை திரும்ப முடியாமல் தவித்தனர்.

ந்நிலையில், மீனவர்கள் கரை திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் மெரைன் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் காவல் துறையினரால் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது

இதைத்தொடர்ந்து, இனிகோ நகர் மீனவர்கள் சிலர் 6 படகுகளில் கடலில் மாயமான மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர். அதன் பயனாக பலமணி நேர போராட்டத்துக்கு பின், நடுக்கடலில் தத்தளித்தக்கொண்டிருந்த பிரான்சிஸ் மற்றும் சக மீனவர்கள் ஜான் பால், தமிழ் ஆகியோரை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து மீனவர் பிரான்சிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடுக்கடலில் தத்தளிக்கும் சமயம் அவ்வழியாக வந்த மீனவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எவ்வளவோ அபாயக்குரல் எழுப்பியும் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. உதவிக்குக்கூட ஒருவரும் எங்களை திரும்பி பார்க்காதது வருத்தத்தை ஏற்படுத்தியது.

இரண்டு நாள்களாக பட்டினியுடன் கிடந்த நாங்கள் கடலில் நாதியற்று இறந்துவிடுவோமோ என்றே நினைத்திருந்தோம். இச்சூழலில்தான் இனிகோ நகர் மீனவர்கள் எங்களை மீட்டுவந்தனர். அவசர காலத்தில் மீனவர்களுக்கு உதவவே அரசு உள்ளது. ஆனால் உதவிக்கு அரசு தரப்பிலிருந்து உதவிட யாரும் முன்வராதது வருத்தமளிக்கிறது. இன்று எங்களுக்கு ஏற்பட்ட நிலைதான், நாளை மற்றொரு மீனவனுக்கும் ஏற்படும். எனவே, அவசரகாலத்தில் மீனவர்களுக்கு உதவிட அரசு எந்நேரத்திலும் தயார்நிலையில் இருந்திட வேண்டும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.