தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் கோரிக்கை மனுக்களை பெற்று வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பெண்கள் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துப் பேசிய செல்வராணி என்பவர், சிலுவைப்பட்டி சுனாமிகுடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச மனை வழங்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் அவர்கள் கோரிக்கை மனுவை வாங்குவதோடு சரி, மற்றபடி எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதைக் கண்டித்தும், இலவச வீட்டுமனை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.