தூத்துக்குடி, கோவில்பட்டி லட்சுமி மில் மேல காலனியைச் சேர்ந்தவர் சிவராஜ் (42). ஜோதி நகரைச் சேர்ந்தவர் அசோகன் (60). இவர்கள் தீப்பெட்டிக்கான தீக்குச்சி உள்ளிட்ட மூலப்பொருள்கள் வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று மாலை (ஜூன் 27) கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி ஆலையில் கழிவு குச்சிகள் வாங்கச் சென்றனர். ஆலையில் கழிவு குச்சிகளை சேகரித்து, சாக்குகளில் கட்டிக் கொண்டிருந்தபோது திடீரென உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு இருவரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடிப்பு - இருவர் காயம்