ETV Bharat / state

'கிடாரி' திரைப்பட பாணியில் பெற்ற மகனை கொன்ற தந்தை! - father killed son

தூத்துக்குடியில் சொத்து பிரச்னை காரணமாக, நீதிமன்றம் எதிரே பெற்ற மகனை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றம் எதிரே மகனை வெட்டி கொலை செய்த தந்தை கைது

author img

By

Published : Jun 21, 2022, 7:42 PM IST

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத்தொகுதியில் உள்ள கவர்நகரி பகுதியைச் சேர்ந்தவர், தமிழழகன். இவரது மகன் காசிராஜன்(30).

இந்த நிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு தந்தை தமிழழகன் வந்தார். அப்போது, மறைந்திருந்த மகன் காசிராஜன், தந்தையை அரிவாளால் வெட்ட முயற்சி செய்தார். இந்நிலையில், தந்தை தமிழழகன் அரிவாளை பிடிங்கி, மகன் காசிராஜனை வெட்டிக்கொலை செய்தார்.

மேலும் தமிழழகனுக்கு பாதுகாப்பிற்காக உடன் வந்த அவரது சகோதரர் கடல் ராஜா மற்றும் சகோதரர் மகன் காசிதுரை ஆகிய இருவரும் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தக் கொலை குறித்து மத்தியபாகம் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்த இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள்..பல லட்ச மதிப்பிலான ரேஷன் பொருட்கள் திருடிய 171 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.