சாத்தான்குளம் விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் துன்புறுத்தப்பட்டது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி ஐஜி சங்கர், "இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் சாத்தான்குளம் வழக்கு தொடர்பான தவறான செய்திகளைச் சிலர் உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
தவறான செய்திகளைப் பரப்புவது வழக்கு விசாரணையைப் பாதிக்கும். உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளம் விவகாரத்தில் நேர்மையாகவும், நடுநிலையோடும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 15 சாட்சியங்களிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. யாரும் தவறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க:’சாத்தான்குளம் விவகாரத்தில் வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை’ - காவல் துறை எச்சரிக்கை