தூத்துக்குடி: வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குநர் அலுவலகம், மாவட்டத் தொழில் மையம் இணைந்து நடத்தும் ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று, கண்காட்சி அரங்கை தொடங்கி வைத்து தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், தொழில் முனைவோர் பலர் பங்கேற்றனர்.
வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு
இந்நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, 'தூத்துக்குடி என்றாலே அது தொழில் முனைவோருக்கான, தொழில் அதிபர்களுக்கான ஒரு இடம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி, தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட உணவுப் பூங்கா கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அவை மீண்டும் செயல்படுத்தப்படும். தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும். தூத்துக்குடி சிப்காட்டில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் சரிசெய்யப்படும்.
41 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு அரசு செயல்படுகிறது.
மேக் இன் இந்தியா, மேக் இன் தமிழ்நாடு, மேக் இன் தூத்துக்குடி என்பதை நாம் நிலை நிறுத்திக்காட்டுவோம்' என்று பேசினார்.
இதையும் படிங்க: அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு