ETV Bharat / state

ஸ்டாலினும், மம்தாவும் மக்களை கசக்கி எறிவார்கள் - பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி: அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கி எறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டுவருவதாக பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

pon radhakrishnan
pon radhakrishnan
author img

By

Published : Dec 24, 2019, 6:44 PM IST

தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தனி பெரும்பான்மை கட்சியாக பாஜக வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாகக்கொண்டது. கூட்டணி சரியாக அமையவில்லையென்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.

திமுகவை கடுமையாக விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தலில் தற்பொழுது கூட்டணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மக்களை திசை திருப்பி கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக ஆதாயம் தேடியே திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாழாக்கப்பட்டுவிட்டன. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

எனவே திமுக இது போன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியான முறையில் சேவை செய்ய வேண்டும். பிரச்னைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எரியும் வழக்கத்தை தமிழ்நாட்டில் திமுக கட்சியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் கையாண்டு வருகின்றனர், இது முறையானதல்ல" என்றார்.

இதையும் படிங்க: 'தேர்வுக்கு முன்பே வெளியான வினாத்தாள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன' - அமைச்சர் செங்கோட்டையன்

Intro:அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கிஎறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டு வருகின்றனர் - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

Body:அரசியல் லாபத்துக்காக மக்களை பயன்படுத்திவிட்டு கசக்கிஎறிவதை ஸ்டாலினும், மம்தாவும் கையாண்டு வருகின்றனர் - பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

தூத்துக்குடி

தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது,

தனிப்பெரும்பான்மை கட்சியாக பாரதிய ஜனதா கட்சி வராவிட்டாலும் அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சி ஜார்கண்டில் நிலைபெற்றுள்ளது. தேர்தல் அந்தந்த மாநிலத்தின் நிர்வாகங்களை அடிப்படையாக கொண்டது. கூட்டணியை சரியாக அமையவில்லை என்றால் மிகப்பெரிய சறுக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டது.
தேர்தலில் தற்பொழுது கூட்டணி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பாஜக மிக வலுவாக உள்ளது. மாநிலங்களில் பாஜகவுக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதை சரிபண்ணகூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

மக்களை திசைதிருப்பி கலவரத்தை உண்டாக்கி அதன் மூலமாக ஆதாயம் தேடியே திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் பழக்கப்பட்டுவிட்டன. குடியுரிமை சட்டத்தை, கலவரம் ஏற்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு அடிப்படையில் திமுக நடத்துகிற போராட்டம் சரியில்லாத ஒன்று என 60 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு மக்களுக்கு உருப்படியான முறையில் சேவை செய்ய வேண்டும். பிரச்சினைகளை அரசியல் ஆதாயத்துக்காக, அரசியல் காரணத்திற்காக பயன்படுத்தக்கூடிய காரணத்தினால்தான் ஒரு சில சமூகத்தினர் தங்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்களை இழந்து நிற்கிறோம் என்பதை உணர ஆரம்பித்துள்ளனர். திமுக-காங்கிரஸ் இரண்டு கட்சிகள் சேர்ந்து தான் இந்த நாட்டை அளித்துள்ளனர். பிரச்சனைகளின் மூலம் அரசியல் ஆதாயத்துக்காக லாபம் தேடிவிட்டு பிறகு மக்களை கசக்கி எரியும் வழக்கத்தை தமிழகத்தில் திமுக கட்சியும், அங்கே மம்தாவும் கையாண்டு வருகின்றனர் இது முறையானதல்ல என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.