ETV Bharat / state

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்பு! - tuticorin district news

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்பு,  மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரியவரிடம் ஒப்படைத்தார்.

ஆள்மாறாட்டம்,போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட நிலம் மீட்பு!

author img

By

Published : Nov 23, 2020, 6:22 PM IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் முத்துக்கருப்பன் என்பவருக்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் உள்ளது. 1955ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு அவரது வாரிசுகள் சொத்தை அனுபவித்துவந்தனர். இந்நிலையில் முத்துக்கருப்பன் உயிரோடு இருப்பது போன்று வேறு ஒரு நபரை போலியாக நடிக்க வைத்து ஆள்மாறாட்டம் செய்து, தூத்துக்குடி தாலுகா பனையூரைச் சேர்ந்த பரமசிவன் என்பவருக்கு கடந்த ஜூலை 31ஆம் தேதி போலியாக பொது அதிகார பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த நிலத்தை தூத்துக்குடி முள்ளூர் முத்துக்குமாரபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு நவ. 6 ஆம் தேதி கிரையம் செய்ய முயன்றுள்ளனர். இந்நிலையில் அந்த நிலத்தின் உண்மை வாரிசுதாரான சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முரளீதரன் (31) என்பவர் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரளிடம் புகாரளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், போலியாக பதிவு செய்யப்பட்ட 16 ஏக்கர் நிலத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்து, நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 32லட்சம் ஆகும்.

மீட்கப்பட்ட நிலத்தின் ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உரியவரிடம் இன்று ஒப்படைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.