ETV Bharat / state

தூத்துக்குடியில்  102 கிலோ தங்கம் பறிமுதல்...!

தூத்துக்குடி: 102 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பறக்கும் படை
author img

By

Published : Mar 29, 2019, 7:34 PM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், இலவச பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நகைக் கடை அருகே தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த டெம்போ ட்ராவலர் ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் தங்க வியாபாரி தென் மாவட்டங்களில் தங்க நகைகளை விற்பனை செய்யும் பொருட்டு தங்கம் எடுத்து வந்ததாக கூறினார்.

ஆனால் அவரிடம் தங்கம் எடுத்து வந்து அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. எனவே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தங்கத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி ஒப்படைத்தனர்.

Intro:தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் 102 கிலோ தங்கம் பறிமுதல்

Body:ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு முறைகேடாக பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் மணியம் அதை தடுப்பதற்காக பறக்கும் படை குழுவினர் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இன்று மதியம் தேர்தல் படக்குழுவினர் ஒரு நகைக் கடை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த டெம்போ ட்ராவலர் ஒன்றினை சந்தேகத்தின் பெயரில் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர் இதில் டெம்போ டிராவலர் வண்டிகள் முறையான ஆவணங்கள் இன்றி 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி எடுத்துவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் தங்க வியாபாரி தென்மாவட்டங்களில் தங்க நகைகளை விற்பனை செய்யும் பொருட்டு தங்கம் எடுத்து வந்ததாக கூறினார். ஆனால் அவரிடம் தங்கம் எடுத்து வந்து அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து வாகனத்துடன் தங்கத்தை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பறிமுதல் செய்யப்பட்ட தங்களை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இன்று மதியம் நடைபெற்ற தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 102 கிலோ தங்கம், வெள்ளி கொண்டு வந்த வாகனத்தை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சேலம் மதுரை சிவகங்கை திருநெல்வேலி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பிரபல தங்க நகைக் கடைகளுக்கு தங்கம் கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருவதாக கூறி உள்ளார். ஆனால் வாகனத்தில் தங்கம் எடுத்து வந்ததற்கான முறையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. எனவே வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களின் உண்மையான மதிப்பு மற்றும் அளவு குறித்து கணக்கிட வருமானவரித் துறை மற்றும் சுங்க வரித் துறையினர் வர உள்ளனர் அவர்களின் சோதனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.