ETV Bharat / state

டிஐஜி விஜயகுமார் வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கோயம்புத்தூர் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 8, 2023, 7:58 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி: அதிமுக கழக செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூரில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் இன்று காலை வருகை தந்தார். வருகை தந்த அவரை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை செய்யப்பட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டார். பின்னர், அங்கிருந்து சென்னை செல்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு கட்சியினர் பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் காவலன் நல வாழ்வு திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து சுமார் ஒன்றரை லட்சம் காவலர்கள், காவல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன அழுத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஒரு திறமையான, நேர்மையான காவல் அதிகாரி, அவருக்கு 6 மாத காலமாக மனஅழுத்தம் இருப்பதாகவும், கடந்த 20 நாள்களாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி மன அழுத்தமுள்ள ஒருவரை சிகிச்சைப் பெற்று வருகின்ற ஒருவரை எதற்காக பணி கொடுத்தனர். மேலும் மன அழுத்தம் காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விஷயம், ஒரு திறமையான, நேர்மையான உயர் காவல் துறை அதிகாரி இறந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இன்றைய (திமுக) ஆட்சியாளர்கள் நிமான்ஸ் மருத்துவமனையோடு காவலர் நலவாழ்வு திட்டத்தை நிறுத்தி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த திட்டம் நீடிக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கும். டிஐஜி விஜயகுமார் இறப்பு தற்கொலையா? அல்லது வேறு என்ன என்பதை அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும். குடும்பத்திலும் எந்த மன உறுத்தலும் கிடையாது.

பணியிலும் எந்த மன அழுத்தம் இல்லை என்று காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அப்படி என்றால் அவருக்கு எந்த வகையில் மன அழுத்தம் ஏற்பட்டது என்பது மிகப்பெரிய ஒரு கேள்வியாக எழுந்திருக்கிறது. அரசு இனியாவது காவலர், உயர் அதிகாரிகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருந்தாலும் ஓய்வு கொடுக்க வேண்டும். அதோடு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேயே பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து இந்த அரசு செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்டவர், வருமானதிற்க்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் இவர் ஊழல் தடுப்புதுறையை கண்காணிகத்து வருகிறார். ஊழல் செய்கின்ற ஒருவர் வழக்கு உள்ளவர் ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது. ஏன் பிஎன்று சொன்னால் அந்த வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற பொழுது ஊழல் தடுப்புத் துறையில் இவர் ஒதுக்கப்பட்டு அவருடைய கீழ் வருவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இவர் உழல் பற்றி பேசுகிறார். ஆளுநருக்கு கடிதம் எழுதிக்கிறார்.

இந்த துறை இருப்பதே சரி அல்ல தவறு, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கையிலேயே ஊழல் தடுப்பு பிரிவு இருந்தால் எப்படி சரியாக இருக்கும். அது மட்டுமல்ல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித்தலைவி அம்மா தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் இப்போது இருக்கும் பல அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்தது. வாய்தா வாங்கிட்டு வந்தனர்.

இப்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் வழக்கறிஞரை அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இப்போது இருக்கின்ற அமைச்சர்கள் பலர் நீதிமன்றத்தில் இருந்து விடுதலை ஆவதற்கு காரணம் அவருடைய திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரியான முறையில் நீதிமன்றத்திலே வாதத்தை எடுத்து வைக்காதது தான்.

இந்த காரணத்தினாலேயே முழுமையான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் இன்றைக்கு பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கிலிருந்து நீதிமன்றத்தினால் விடுதலை ஆகி இருக்கிறார். இது தெளிவாகத் தெரிகிறது; இதற்கெல்லாம் யாரும் காரணம் என்றால் அமைச்சர் ரகுபதி, இவர் எப்படி இந்த துறையை கவனிக்க முடியும். மாவட்டங்களில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பூர்வீகப் பணி தொடங்கபட்டது.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி உறுப்பினரை புதுப்பிக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கப்படவேண்டும். இதுவரை ஒரு கோடியே 60 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் புதிப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று கழகத்தின் சார்பாக மிகப் பிரம்மாண்டமான பெரிய மாநாடு எழுச்சியுடன் நடைபெறவுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக - பாஜக கட்சிக்கு அடிமை என்று சொல்கிறார். அவர் தான் அடிமை; அதிமுக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பயம் என்றனர். 20 நாள்களாக எந்த ஒரு ஸ்டேட்மெண்ட்டும் கிடையாது. நடுங்கி போயிருப்பது திமுக தான், திமுக அமைச்சர்களும் திமுக கட்சியும் தான், அண்ணா திமுக ஒருபோதும் அப்படிப்பட்ட நிலையில் இருக்காது. ‘மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை.’

1999 ஆம் ஆண்டில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது திமுக, அன்று இதே திமுக அமைச்சரவையில் இடம் பெற்றார்கள். அடுத்து காங்கிரஸில் சேர்ந்தனர். திமுக கட்சியிணருக்கு கொள்கையாவது, கோட்பாடாது. ஒன்னும் இல்லாத கட்சி, பதவி வேணும் என்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து குடும்ப கட்சி குடும்பத்தின் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆகவே, கருணாநிதி குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கு எதை வேணாலும் செய்வார்கள். எந்த கொள்கையும் கோட்பாடும் கிடையாது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி திமுக கட்சி.

எந்த துறையில் உழல் செய்யலாம். மக்கள் மக்களுடைய திசை மாறிவிட்டது. பாதை மாறி விட்டது. எங்கே பார்த்தாலும் இன்றைக்கு போராட்டம், அவர் பொம்மை முதலமைச்சர், எழுதி கொடுத்ததை பார்த்து வாசிப்பார். நாடு மக்களைப்பற்றி கவலைப்படடாத முதலமைச்சர். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விலைவாசி உயர்கிறது. மக்கள் பற்றி கவலை இல்லை. அதிமுக ஆட்சி காலத்தில் விலை உயரும் போது அண்டை மாநிலத்திற்குச் சென்று கொள்முதல் செய்து விற்பனை செய்தோம்.

காய்கறி, இஞ்சி, தக்காளி போன்றவைகள் விலை 70 விழுக்காடு உயர்ந்துவிட்டது. சாதாரண ஏழை மக்கள் வருமானம் உயரவில்லை. திறமையற்ற அரசாங்கம். ஒவ்வொரு ஆண்டும் 5 விழுக்காடு மின் கட்டண உயர்வு உயர்த்தி இருக்கின்றனர். ஆகவே இந்த ஆட்சி வந்த பிறகு மக்கள் படுவது துன்பம் தான் இந்த ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது வேதனையும் துன்பம் தான். அரசு மருத்துவமனையில், சளிக்கு போய் மருந்து கேட்டால் நாய் கடிக்கு ஊசி போடுகிறார்கள். கையோட மருத்துவமனைக்கு போனால் கை இல்லாமல் வெளியே வருகின்றனர்.

அண்ணா திமுக ஆட்சியில், கையோடு உள்ளே போனால் கையோடு வெளியே வருகின்றனர். இதுதான் அதிமுக, திமுக ஆட்சிக்குள்ள வித்தியாசம். இப்போதுதான் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வந்திருக்கிறது. இனி நிறைய சரக்கு வெளிவரும்” என்றார்

இதையும் படிங்க: ‘டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தடுக்க நடவடிக்கை’ - அமைச்சர் முத்துசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.