ETV Bharat / state

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நேயாளிகள் தரையில் படுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 27, 2023, 10:57 PM IST

அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்!!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பிரிவிலும், 500க்கும் மேற்ப்பட்டோர் உள்நோயாளிகள் பிரிவிலும் தங்கிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் சிகிச்சைக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் போதி படுக்கை வசதி இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டில் 60 படுக்கை வசதி தான் உள்ளது. ஆனால், 120 பேருக்கு மேலாக சிகிச்சைக்கு வரும் நிலை உள்ளதால் அனைவருக்கும் படுக்கை வசதி செய்து கொடுக்க முடியாத நிலை இருப்பதால் 50க்கும் மேற்பட்டவர்கள் படுக்கை வசதி கிடைக்கமால் தரையில் படுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் பெரும்பாலானவர்கள் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடதக்கது. படுக்கை கிடைக்கவில்லை என்பதால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் தரையிலும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு அருகே ஷெட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் வெயில், மழை என மாறி மாறி இயற்கை போக்குகாட்டி வருவதால் சிகிச்சை பெற வந்தவர்கள் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை பெய்தால் ஓரத்தில் நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே மருத்துவமனை உள்ளே செயல்பட்டு வந்த மகப்பேறு பிரிவு தற்போது புதியதாக கட்டப்பட்டு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயன்படுத்திய கட்டடங்களும் காலியாக உள்ளன. படுக்கை எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அறுவை சிகிச்சைக்காக வருபவர்களுக்கு காலியாக உள்ள கட்டடத்தினை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அங்கு போதிய வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போதிய படுக்கை வசதி இல்லை என்பதால் சிகிச்சை பெறுபவர்கள் தரையில் படுத்து அவதிப்பட்டு வருகின்றனர். அது மட்டுமல்லாது தரையில் படுத்து இருக்கும் நோயாளிகள் தாங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை பயன்படுத்தி தூங்கும் நிலை உள்ளது.

சிகிச்சை பெறுபவர்கள் அவதிப்பட்டு வருவதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலை, என்னை விமர்சிப்பது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை - அமைச்சர் கீதா ஜீவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.