பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுக எம்.பி., கனிமொழி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர்,” மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்தைக் கையில் எடுத்த பிறகுதான் ஆளுநர் கையெழுத்து போட்டுள்ளார். ஏன் கையெழுத்திட இவ்வளவு தாமதம், ஆளுநர் அலைக்கழித்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. ஆளுநர் காலதாமதம் செய்தது தமிழ்நாடு மக்களுக்கு இழைத்த அநீதி” என தெரிவித்தார்.
அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரம்மசக்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:'திமுகவின் அழுத்தம்தான் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு அரசாணை’: ஸ்டாலின்