தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக கனிமொழி நேற்று அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி திமுக பொறுப்பாளர் கால்வாய் இசக்கி பாண்டியன் தலைமையில் சுமார் பெண்கள் உள்பட கட்சியினர் திரண்டனர். பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பின்னர் கருங்குளம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த மூன்று குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கினர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கோ, வாக்காளர்களுக்கோ எந்தவித பரிசுப் பொருள்களையும் வழங்கக் கூடாது எனவும், வாக்காளர்கள் அரசியல் கட்சியினரிடம் இருந்து பரிசுப் பொருள்களோ, பணமோ வாங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்குவதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுகவினர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய சம்பவம் தேர்தல் நடைமுறை விதிகளை மீறிய சம்பவம் என்பதால் அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.