தூத்துக்குடி மாவட்டம் கோயில்பிள்ளை விளை பகுதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அடிக்கல் நாட்டினார்.இதைத்தொடர்ந்து அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மழைநீர் தேங்கும் பகுதிகளில் அப்பணிகள் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளின் நலன் கருதி அரசு சார்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்தப்படும். பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் வைப்பு தொகை செலுத்தப்படும். அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் பொழுது அந்த தொகை வட்டியோடு வழங்கப்படும்.
தற்போது எல்லா மாவட்டத்திலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 2500க்கும் மேல் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. அதுபோல் 75 குழந்தைகள் தாய் - தந்தை என இருவரையும் இழந்துள்ளனர். குறிப்பாக மாதம் 3 ஆயிரம் ரூபாய் அவர்களது பாதுகாவலருக்கு பராமரிப்பு செலவிற்கு வழங்கப்படும். கல்லூரி படிப்பு முடியும் வரை அவர்களுக்கு அரசு உதவி செய்யும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர் அஸ்பயர் சுவாமிநாதன்!