ETV Bharat / state

அதெப்புடி திமிங்கலம்.. ஏடிஎம்மில் ரூ.200 பதில் ரூ.20 வந்ததால் வாடிக்கையாளர் ஷாக்.. - கோவில்பட்டியில் தனியார் ஏடிஎம் மையத்தில்

கோவில்பட்டியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் 200 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாய் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 2:33 PM IST

ஏடிஎம்மில் ரூ.200 பதில் ரூ.20 வந்ததால் வாடிக்கையாளர் ஷாக்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சாலைப் புதூர் தோணுகால் சாலையில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் படர்ந்தபுளியை சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் ரூ.3,500 ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது, 500 ரூபாய் நோட்டுகள் ஆறும், 100 ரூபாய் நோட்டு ஒன்றும், 20 ரூபாய் நோட்டுகள் இரண்டும் வந்துள்ளது.

அந்த வகையில், ரூ. 3,500 பதிலாக 3,140 ரூபாய் மட்டுமே வந்துள்ளது. ஆகவே, 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டுகள் வந்தாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஐயப்பன் இதுதொடர்பாக புகார் செய்ய முயன்ற போது, அந்த மையத்தில் எவ்வித புகார் தொடர்பு எண்ணும் இல்லை.

இதையடுத்து அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் விரைந்து ஏடிஎம் எந்திரத்தை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஐயப்பனிடம் 20 ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் வர வாய்ப்பு இல்லை.

இருந்த போதிலும், இதுகுறித்து மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதோடு தவறு நடந்திருந்தால் இன்னும் மூன்று தினங்களுக்குள் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரு பேனருக்கு இவ்வளவு மரியாதையா.? மின் கம்பத்தில் ஜேசிபி மூலம் பழுது பார்த்த ஊழியர்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.