ஏசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளையும், சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்காலம் அனுசரிக்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சாம்பல் புதன் தினத்துடன் தொடங்கியது. தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான ஏசு உயிர் துறந்த தினமான இன்று(ஏப்.2) புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
புனித வெள்ளியை முன்னிட்டு, தூத்துக்குடியில் உலகப்புகழ்பெற்ற 438 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த தூய பனிமய மாதா பேராலயத்தில் இன்று(ஏப்.2) காலை சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமை வகித்தார்.
இதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றிலும் இயேசு சிலுவையை சுமப்பது போன்ற திருச்சொரூப பவனி நடைபெற்றது.
அப்போது 14 ஸ்தலங்களில் திருச்சொரூபத்தை நிறுத்தி, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: