தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகராட்சி சார்பாக கரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் கரோனாவை எப்படி எதிர்கொள்வது என்று பத்திரப்பதிவு அலுவலர்களுக்கும், அங்குள்ள பொதுமக்களுக்கும் செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்கள்.
இந்த முகாமில் ஆரம்ப சுகாதார மருத்துவர் கோமதி நையினார், கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் இணைந்து கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று விளக்கம் அளித்தனர்.
இம்முகாமில், பத்திரப்பதிவு இணைப்பதிவாளர் பாஸ்கர், அலுவலக ஊழியர்கள், அனைத்து பத்திர எழுத்தாளர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
இதையும் படிங்க: ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க திமுக எம்பிக்கள் கோரிக்கை