திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடக்கும் யானை நலவாழ்வு முகாமிற்கு செல்கிறது.
இதையடுத்து, திருச்செந்தூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானை உடல் நலம் பற்றி ஆய்வு செய்தனர்.
கரோனா தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டு யானை நலமாக இருப்பதாக சான்று அளிக்கப்பட்டது.
இந்த மருத்துவ சான்றிதழை திருச்செந்தூர் கால்நடை உதவி மருத்துவர் பொன்ராஜ், கோயில் உதவி ஆணையர் செல்வராஜிடம் வழங்கினார்.
அப்போது தக்கார் பிரதிநிதி, ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குநருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: நடமாடும் மண் பரிசோதனை நிலையம்:கோவையில் 8 நாள்கள் முகாம்!