உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துவருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரசிலிருந்து பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது.
மேலும், முக்கியமான கோரிக்கை என்றால் மட்டுமே கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும், சாதாரண கோரிக்கை என்றால் இனையதளம் மூலம் அனுப்ப வேண்டும் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: புதுமையான முறையில் விழிப்புணர்வு