சீனாவில் உருவான கரோனா வைரஸ் பல உலக நாடுகளை ஆட்கொண்டுவருகிறது. இதனால் இந்தியாவிலும் இதுவரை 239 பேர் உயிரிழந்தும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்தும் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் ஒன்பது பேர் உயிரிழந்தும் 911 பேர் கரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பாதித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 71 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, உறவினர்கள் யாருமின்றி கரோனா வைரஸ் தொற்று பரவாத வண்ணம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் மூதாட்டி உடல் புதைக்கப்பட்டது.
இதையும் படிங்க....தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!