தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். அதையடுத்து தூத்துக்குடியில் 15 நாள்கள் புதிய கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. அதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்ட நிலையில் அண்டை மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் சிலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தூத்துக்குடி வந்த இருவருக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 11 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும், மற்ற 10 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து வந்த நபர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக அண்டை மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அலுவலர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி: கரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!