ETV Bharat / state

சடலமாக கிடந்த தொழிலாளி! கொலையா? - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: டூவிபுரம் பகுதியில் சடலமாக கிடந்த தொழிலாளியின் உடலை மீட்ட காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சடலமாக கிடந்த தொழிலாளி!
சடலமாக கிடந்த தொழிலாளி!
author img

By

Published : May 8, 2020, 7:01 PM IST

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் இரண்டாவது தெருவைச் சேர்ந்த சரவணன் (47). கட்டட தொழிலாளியான இவர், இன்று அதிகாலை வீட்டின் அருகே முகத்தில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த நகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் மத்திய பாகம் காவல்துறையினர், சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சரவணன் தனது சகோதரி மகளின் நீராட்டு விழா நேற்று நடைபெற்றபோது மதுபோதையில் இருந்துள்ளார். அச்சமயம் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால், அதுகுறித்து புகார் தெரிவிக்க அண்டை வீட்டாரின் உதவியை நாடியுள்ளார்.

புகார் தெரிவிக்க செல்போன் எண் வாங்க சென்ற இடத்தில், பக்கத்து வீட்டு நபரான ஜவாஹிருல்லாவுக்கும், சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதனை அக்கம்பக்கத்தினர் கண்டித்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர்.

சரவணனுடன், ஏற்பட்ட தகராறு தொடர்பாக இரவு முழுவதும் ஜவாஹிருல்லா புலம்பியுள்ளார். இந்நிலையில்தான், இன்று அதிகாலை சரவணன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சரவணனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொலைசெய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஜவாஹிருல்லாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் பார்க்க: விபத்திற்குள்ளான இந்திய விமானப்படை விமானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.