ETV Bharat / state

தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு- மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் திங்கள் கிழமை காலைவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

complete lockdown imposed in tuticorin said collector sandeep nandhuri

author img

By

Published : Jul 3, 2020, 8:00 PM IST

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதிவரை சுய ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்திட இம்மாதம் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் (5.7.2020, 12.7.2020, 19.7.2020, 26.7.2020) எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (4.7.2020) இரவு 12 மணி முதல் 6.7.2020 காலை 6 மணிவரை எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கின்போது, பால் விநியோம், மருத்துவமனைகள், மருத்து கடை, மருத்துவ வாகனங்கள், அவசர ஊர்தி, மருத்துவ வசதிகளுக்கு பயன்படுத்த தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.