தூத்துக்குடி திருமண்டல நாசரேத் சேகரத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த கிறிஸ்தவ சபை ஊழியரான அகஸ்டின் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் விரக்தியடைந்த அவர் நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் மணி கூண்டின் உச்சியில் ஏறி நின்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாசரேத் காவல்துறையினர் அகஸ்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் போராடியும் அகஸ்டின் பேச்சுவார்த்தையில் சமரசம் செய்துகொள்ள விருப்பமின்றி கீழே இறங்க மறுத்துவிட்டார்.
இதன் பின்னர் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அகஸ்டின் கீழே இறங்கிவந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... மனைவி தற்கொலை முயற்சி - தண்டனை பயத்தில் கணவர் தற்கொலை!