உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. இந்தப் பணியானது இந்த மாத இறுதி வரை நடைபெறுகிறது.
இந்த பணியில் 10 ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களும், இப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 24 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ் பிராமி எழுத்துக்களும் முதுமக்கள் தாழிகளும் எலும்புகளும் இரும்பு கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியின் தொடர்ச்சியாக கால்வாய் செல்லும் பனங்காட்டு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அந்த அகழாய்வு பணியில் சுமார் இரண்டு அடி தோண்டிய போது அதில் 2 முதல் 3 வயது வரை மதிக்கத்தக்க குழந்தையின் எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளும் போது இதன் காலம் தெரிய வரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...'தமிழ் பேசும் இந்தியன்’ டி-சர்ட் அணிந்த வெற்றிமாறன் - வைரலான புகைப்படம்!