சென்னையில் நடைபெறும் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(ஜூலை21) தொடங்கியது.
போட்டியை நகர் மன்ற 22ஆவது வார்டு உறுப்பினர் லூர்துமேரி தொடக்கி வைத்தார். சதுரங்கப்போட்டியில் கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், 6ஆம் முதல் 12ஆம் வகுப்பு என 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடைபெற்றது.
இதையும் படிங்க:இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு