ETV Bharat / state

Masi Thiruvizha: திருச்செந்தூரில் களைக்கட்டிய மாசித் திருவிழா தேரோட்டம்! - திருச்செந்தூரில் களைக்கட்டிய

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 6, 2023, 1:07 PM IST

Masi Thiruvizha: திருச்செந்தூரில் களைக்கட்டிய மாசித்திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி: முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா காலங்களில் தினசரி காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் தங்க சப்ரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8ஆம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் பச்சை பட்டு உடுத்திய கோளத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழா நாட்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டகள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சூரிய காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் இன்று (மார்ச்.6) காலையில் நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு விசுவரூப தீபாரானையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. இதன் பின்னர் தொடங்கிய தேரோட்டத்தில் முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது.

பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரியத் தேர் புறப்பட்டது. இந்த பெரியத் தேரை தனியார் நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அப்போது அங்கிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா' என்று பக்தியுடன் கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்தனர்.

இதையடுத்து தேர் ரதவீதி நான்கிலும் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டு ரதவீதிகளில் பவனி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இந்த தேரோட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசி திருவிழாவின் தெப்ப உற்சவம் நாளை இரவு நடைபெற உள்ளது. நாளை நடக்க உள்ள விழாவில் பல வண்ண மலர்கள் கொண்ட அலங்காரத்தில் முருகப் பெருமான் தெப்ப உற்சவம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாதுகாப்பு அம்சங்களுக்காக அங்கு முந்நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'ஒரு சின்ன தாமரை' கிரிவலப் பாதையில் லவ் சாங்.. திருவண்ணாமலை பக்தர்கள் ஷாக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.