ETV Bharat / state

சிபிசிஐடி ஆவணத்தில் எழுந்த சந்தேகம்: ஐந்து மணி நேர ஆலோசனை நடத்திய சிபிஐ! - thoothukudi news

தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி தாக்கல் செய்த ஆவணங்களில் ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து நேற்று சிபிசிஐடி காவல்துறையினரிடம் சிபிஐ அலுவலர்கள் ஐந்து மணி நேர ஆலோசனை நடத்தினர்.

தூத்துக்குடி சாத்தான்குளம்  சிபிஐ விசாரணை  சாத்தான்குளம் விசாரணை  சிபிசிஐடி  சிபிசிஐடி சிபிஐ ஆலோசனை  cbcid cbi disscussion  thoothukudi news  thoothukudi cbi case
சிபிசிஐடி அலுவலர்களுடன் சிபிஐ ஐந்து மணி நேர ஆலோசனை
author img

By

Published : Jul 24, 2020, 8:53 AM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் நிலைய மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, சிபிசிஐடி போலீசாரிடம் இருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிஐ அலுவலர்கள் சாத்தான்குளத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

ஜெயராஜின் உறவினர்கள், செல்போன் கடை, பக்கத்து கடைக்காரர்கள், சாட்சியங்கள், பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், சிசிடிவி கேமரா காட்சிகள், பென்னிக்ஸின் நண்பர்கள் உள்பட பல தரப்பட்ட சாட்சிகளிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

இதைதொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்களை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. விசாரணையின்போது, சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள், சிபிசிஐடி தரப்பில் வழங்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மூலமாக கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், சிபிசிஐடியிடம் பெற்றுக்கொண்ட வழக்கு ஆவணங்களில் எழுந்த சந்தேகங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா, தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி முகாம் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு நேற்று(ஜூலை 23) மாலை 5 மணி அளவில் வந்த சிபிஐ அலுவலர்கள் இரவு 10.15 மணிவரை சிபிசிஐடி காவல்துறையினரிடம் சாத்தான்குளம் வழக்கு தொடர்பான சந்தேகங்களை கலந்தாலோசித்தனர்.

அதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவற்றின் நகல்களை பெற்றுக்கொண்டு, இரவு 10.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் இருந்து மதுரை புறப்பட்டு சென்றனர்.

இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன் உள்பட மூவருக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.