ETV Bharat / state

'மேகதாது அணை' கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்க முடியுமா? சீமான் கேள்வி! - dmk

கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை, திமுகவும் திருமாவளவனும் தடுக்க முடியுமா..? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா..? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி!

author img

By

Published : May 19, 2023, 9:32 PM IST

மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா..? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் இன்று (மே 19) செய்தார். மேலும், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் இரண்டு அடி நீளமுள்ள தங்க வேலை, கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜல்லிக்கட்டு (jallikattu) குறித்த நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை அனைத்து தமிழர்களும் கொண்டாட வேண்டும்.

கல்விக்காக ரூ.10 லட்சம் அரசு செலவிட தயாரா?: மேலும், நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதை மட்டுமே இலக்காக கொண்டு மாநிலம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்' எனத் தெரிவித்தார். 'தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் தாய்மொழி பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் மற்றும் குறைந்த அளவிலான தேர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 'தமிழ்நாடு' எனப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா?' என கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து, 'தமிழகத்தில் கல்வி பயில்வதற்காக நகைகளை அடமானம் வைத்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், அரசு விஷச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கிறது. இதுதான் திராவிடமாடல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.

அரசு விற்கும் சாராயம் மட்டும் நல்லதா?: அதிமுக ஆட்சிக்காலத்தில் விஷ சாராயம் இல்லையா? என கேள்வியெழுப்பிய அவர், விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து விஷச்சாராயத்தை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதனால், அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். கள்ளச்சாராயம் நேற்று காய்ச்சி இன்று குடித்த நிகழ்வு அல்ல. பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அரசு விற்றால் சாராயம், தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? என்று சுட்டிக்காட்டினார்.

திருமாவளவன் திமுகவினை விடவே மாட்டார்கள்: திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடியாது. வட மாவட்டங்களில் திமுக வெற்றி பெற்றதற்கு திருமாவளவன் தான் காரணம் என்றார். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் திமுகவிற்கு திருமாவளவன் தேவை. ஆதலால், திருமாவளவனை கூட்டணியில் இருந்து வெளியே விடமாட்டார்கள், திமுகவினர். அதிமுக-பாஜக கூட்டணி இறுதியாகிவிட்டது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவத்தை எதிர்க்கும் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் எங்கே செல்வார்' என்று கேள்வியுழுப்பினார்.

திருமாவளவன் வந்தால் வரவேற்போம்: நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதை திருமாவளவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கோட்பாடுகளை ஏற்று திருமாவளவன் உட்பட யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார். 'தமிழகத்தில் மதுவை ஒழிக்க நினைப்பவர்கள் வந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியம். தமிழகத்திற்கு மது கடைகளை கொண்டு வந்தவர், கருணாநிதி. மதுக்கடைகளில் இருந்து பெறும் லாபம் மூலமே இலவசங்கள் வழங்கப்படுகின்றன.

திருமாவளவனும் திமுகவும் மேகதாது அணையை தடுப்பார்களா?: காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை. கதர் கட்டிய பாஜக, காவி கட்டிய காங்கிரஸ் இருவருமே ஒன்றுதான். ஊழல் பற்றி பேச காங்கிரஸுக்கு அருகதை இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் மேகதாது அணை கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்கமுடியுமா..? என்று கேள்வியெழுப்பினார். அத்தோடு, இந்த மேகதாது அணையை வைத்துதான் கர்நாடகாவில் நாடாளுமன்ற வாக்கு சேகரிப்பு நடைபெறும். இன்னும் ஆறு மாதத்தில் மேகதாது அணை கட்டுவார்கள் இதை தடுக்க முடியுமா?' எனவும் சீமான் மீண்டும் கேள்வியெழுப்பினார்.

'காங்கிரஸும் பாஜகவும் தேசிய கட்சிகள். மாநில கட்சிகளே, மாநில உரிமை பற்றி பேச முடியும். நாடு கூட்டாட்சி தத்துவத்தில் உள்ளது. மாநிலத்தில் தன்னாட்சி, மத்தியில் கூட்டாட்சி வரவேண்டும் என்றால், மாநில கட்சிகளுக்கிடையே சுழற்சி முறையில் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்'. இந்தியாவிலேயே இரண்டு ஆண்டுகள் கூட்டாட்சியில் நடைபெற்ற வி.பி.சிங் ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்றும் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியால் தான் சிறந்த கூட்டாட்சியை தரமுடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிர்வாகக் கல்விப் பயிற்சி முகாமில் பங்கேற்க தொழில் முறை ஊழியர்களுக்கு சென்னை ஐஐடி அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.