தூத்துக்குடி: இந்தப் போட்டி புதூர் அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றது. இது பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் மொத்தம் 26 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன; 8 கிலோமீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் சிறிய மாட்டு வண்டி போட்டியில் 36 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன; 6 கிலோ மீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற பெரிய மாட்டு வண்டி உரிமையாளருக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 17 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி உரிமையாளருக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 11 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்த போட்டி அருப்புக்கோட்டை சாலையில் நடைபெற்றதால், அருகில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் வந்து கண்டுகளித்தனர். மேலும் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
இதையும் படிங்க: சிட்டாகப் பறந்த 'ரேக்ளா ரேஸ்' - சீவலப்பேரி மாடுகளுக்கு முதல் பரிசு