தூத்துக்குடி: திரேஸ்புரம் மாதவர் காலனி குடியிருப்பைச் சேர்ந்த தம்பதி ரமேஷ் - மாரிச்செல்வி. இவர்களுக்கு மாதவன் (4) எனும் மகன் உள்ளார். இவர் நேற்று (ஜூலை.11) கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சீற்றத்துடன் எழுந்து வந்த ராட்சத அலை, மாதவனை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து நேற்று அந்த பகுதி முழுவதும் தேடினர். ஆனால் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
![உயிரிழந்த சிறுவன் மாதவன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12437094_kadal.jpg)
கரை ஒதுங்கிய சிறுவனின் உடல்
இதனைத் தொடர்ந்து வடபாகம் காவல் நிலையத்தில் சிறுவனை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தனர். இந்நிலையில் இன்று (ஜூலை.12) அதிகாலை சிறுவன் மாதவனின் உடல் கரை ஒதுங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர், சிறுவனின் உடலைக் கண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது. இது குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை: தலையில் கல்லைப்போட்டு மகளைக் கொன்ற தாய் கைது