ETV Bharat / state

உலக புத்தக தின விழா - புத்தகக் காட்சி

தூத்துக்குடி: உலக புத்தக தின விழாவை முன்னிட்டு கயத்தார் அரசுகிளை நூலகத்தில் புத்தகக் காட்சி நடைபெற்றது.

புத்தககண்காட்சி
author img

By

Published : Apr 24, 2019, 11:29 AM IST

யுனெஸ்கோ அமைப்பானது 1995ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஏப்ரல் 23ம் தேதி உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் நினைவு தினத்தை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அரசுகிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்றது. உலக புத்தகதினத்தை முன்னிட்டு வில்லியம் ஷேக்ஸ்பியரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், 1000-க்கும் மேற்பட்ட நூல்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்காட்சியினை திரளான மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த விழாவிற்கு கயத்தார் நூலக வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கயத்தார் கிளை நூலக புரவலர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கயத்தார் அரசுகிளை நூலகம், நூலகவாசகர் வட்டம் சார்பில் கயத்தார் அரசுகிளை நூலகத்தில் வைத்து உலக புத்தக தின விழாவை முன்னிட்டு புத்தககண்காட்சி நடைபெற்றது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின்; பிறந்த மற்றும் நினைவு தினத்தை உலக புத்தக தினமாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டு 1995ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு கயத்தாரில் நடைபெற்ற விழாவில் வில்லியம் ஷேக்ஸ்பியரின்; திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. உலக புத்தகதினத்தை முன்னிட்டு ஜெயராம், அர்ஜீனன், காசிவிஸ்வநாதன், அழகுபார்வதி, ராஜா ஆகியோர் தலா ரூபாய் ஆயிரம் செலுத்தி நூலக புரவலராக இணைத்துக் கொண்டனர். புத்தக கண்காட்சியில் 1000க்கும் மேற்பட்ட நூல்கள் பொதுமக்கள் பார்வைக்குவைக்கப்பட்டது. இக்கண்காட்சியினை திரளானமாணவர்கள் பார்வையிட்டனர்.

உலக புத்தக தின விழாவிற்கு கயத்தார் நூலக வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துச்செல்வன் , கயத்தார் நூலக புரவலர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் சிவபெருமாள் அனைவரையும் வரவேற்றார். கயத்தார் கிளை நூலகபுரவலர் ஜெயராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தககண்காட்சியினை திறந்துவைத்தார்.

இவ்விழாவில் கோவில்பட்டி வட்டார நூலக புரவலர் மாரிப்பாண்டி, கடம்பூர் ஆரம்பசுகாதார நிலைய காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசிவிஸ்வநாதன் உள்பட மாணவ-மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கயத்தார் கிளை நூலகபுரவலர் பூலையா நன்றி கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.