தூத்துக்குடி: எப்போதும் வென்றான் அருகே உள்ள அருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (66). இவரது மகள் நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இவ்வாறு வந்த பிகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சோனு குமார் (22) என்பவர், தங்க நகையை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி ஏமாற்றி திருடிச் சென்று உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சேகர் அளித்த புகாரின் பேரில், எப்போதும் வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குப் பதிவு செய்து சோனு குமாரை கைது செய்துள்ளனர். மேலும், கையும் களவுமாக பிடிபட்ட சோனு குமாரிடமிருந்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள 2 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார். வீட்டிற்கே வந்து தங்க நகையை பாலீஷ் செய்து தருவதாகக் கூறி, ஏமாற்றி திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கோத்தகிரியில் கூலி தொழிலாளி கொலையில் திடுக் திருப்பம்..! மனைவியிடம் மதுபோதையில் உளறியதால் வெளி வந்த ரகசியம்!