ETV Bharat / state

வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் பூமி பூஜையை தொடங்கிவைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: சுதந்திர போராட்ட தியாகி வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

poomi pooja
poomi pooja
author img

By

Published : Jun 19, 2020, 6:39 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் சுமார் 72 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மண்டபம் புனரமைப்பு பணிகள் மற்றும் கூடுதல் நூலக கட்டடத்திற்கான பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கவர்னகிரியில் உள்ள சுதந்திர போராட்ட வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டப வளாகத்தில் 26.35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலகம், கழிப்பறை கட்டடம் 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டடம், தண்ணீர் வசதியுடன் கூடிய பராமரிப்பு பணிக்கு 16 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மின் பணிகளுக்காக 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 10 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் இதர பணிகளும் நடைபெறவுள்ளது.

விரைவில் இப்பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தை எச்சரித்த சென்னை மாநகராட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.