ETV Bharat / state

காவி தலைப்பாகை பாரதி உருவப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்! - ettayapuram

தூத்துக்குடி: பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக அட்டையில் காவி தலைப்பாகையுடன் மகா  கவி பாரதியாரின் உருவப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு  தெரிவித்து எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவி தலைப்பாகை பாரதி
author img

By

Published : Jun 9, 2019, 11:05 AM IST

துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் பாடப்புத்தக அட்டையில் காவி தலைப்பாகையுடன் மகா கவி பாரதியாரின் உருவப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ. ராஜேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலர் மு. மணிபாரதி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காவி தலைப்பாகையுடன் பாரதியின் படத்தை பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருப்பதைக் கண்டித்தும், பாரதியை தவறாக சித்திரித்து வெளியிட்ட பிளஸ் 2 தமிழ் பாடப் புத்தகத்தை திரும்பப் பெற்று பாரதியை உரிய முறையில் மாணவர்களுக்கு இனம் காட்ட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது.

பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக அட்டையில் காவி தலைப்பாகையுடன் தேசிய  கவி பாரதியாரின் உருவப்படம் வெளியானதற்கு எதிர்ப்பு  தெரிவித்து எட்டயபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பாரதி முற்போக்கு வாலிபர் சங்கத்தின் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். எட்டயபுரம் பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலர் மு. மணிபாரதி, பாரதி ஆய்வாளர் இளசை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில்,  தேசிய கவி பாரதியாரையும் அவரது கருத்துக்களையும் மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்துவது என்ற பெயரில் காவி தலைப்பாகையுடன் பாரதியின் படத்தை பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் பள்ளிகல்வி துறை வெளியிட்டிருப்பதை கண்டித்தும், பாரதியை தவறாக சித்தரித்து வெளியிட்ட பிளஸ் 2 தமிழ் பாடபுத்தகத்தை திரும்ப பெற்று பாரதியை உரிய முறையில் மாணவ மாணவியர்களுக்கு இனம் காட்ட தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலர் வ. பாலமுருகன், பாரதி முற்போக்கு வாலிபர் சங்க உறுப்பினர்கள் சேது, நல்லையா, தமிழரசன், வேலுச்சாமி மற்றும் தொ.மு.சி. ரகுநாதன் நூலக பாரதி ஆய்வு மைய உறுப்பினர்கள், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.