ETV Bharat / state

அகில இந்திய ஹாக்கிப் போட்டி: ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு அணிகள்! - அகில இந்திய ஹாக்கிப் போட்டி

தூத்துக்குடி: கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கிப் போட்டியில் இரண்டாவது நாளான நேற்று பெங்களூரைச் சேர்ந்த அணிகள் வெற்றியை பதிவு செய்தன.

hockey
author img

By

Published : May 18, 2019, 6:08 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் கே.ஆர். மருத்துவம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்படும் 11ஆம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து தலை சிறந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. சென்னை தெற்கு ரயில்வே - மும்பை யூனியன் வங்கி அணிகள் மோதிய முதல் போட்டியில், இரு அணிகளும் சிறப்பாக ஆடின. இதனால் இந்த போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவடைந்தது.

hockey
சென்னை தெற்கு ரயில்வே - மும்பை யூனியன் வங்கி அணிகள் மோதிய போட்டி

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன்ஸ், சென்னை சாய் அணி ஆகியவை மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடி கோல் ஏதும் அடிக்காத போதும், இரண்டாவது பாதியின் 55வது நிமிடத்தில் பெங்களரு அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன்பின் இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பின்னர் மூன்றாவது போட்டியில் சண்டிகர் சி.ஐ.எஸ்.எஃப் அணியுடன் பெங்களூரு கனரா வங்கி அணி மோதியது. இதில் தொடக்கத்தின் முதலே ஆதிக்கம் செலுத்திய கனரா வங்கி அணி 15, 28, 40, 51வது நிமிடம் என தொடர்ச்சியாக கோல்கள் அடித்து அச்சுறுத்தியது. பதிலுக்கு சண்டிகர் அணி 59 நிமிடத்தில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது. இறுதியில் 4–1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு கனரா வங்கி அணி வெற்றி பெற்றது.

இன்று (18.05.19) நடைபெறும் முதல் போட்டியில் சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்தராபாத் அணி - சென்னை ஐசிஎப் அணிகளும், இரண்டாவது போட்டியில் தெற்கு இரயில்வே, சென்னை அணியும்-கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகடமி அணியும் மோதுகின்றன. மூன்றாவது போட்டியில் ஆல் இந்தியா கஸ்டம் ஜிஎஸ்டி, மும்பை - இந்தியன் வங்கி, சென்னை அணியும் மோதுகின்றன.

கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் பதினொன்றாம் ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு சுழற் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள்  கோவில்பட்டி கிருஷ்ணநகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து தலை சிறந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளது. 2வது நாள் 3 போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டியில் மும்பை யூனியன் வங்கி அணியுடன், சென்னை தெற்கு ரயில்வே அணி மோதியது. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. ஆட்ட நேர முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில் பெங்களுரு ஹாக்கி அசோசியேஷன்ஸ், சென்னை சாய் அணி ஆகியவை மோதின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அண்pகளும் சமபலத்துடன் விளையாடிய காரணத்தினால் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்திலும் போட்டி விறுவிறுப்பாக இருந்தாலும், 55வது நிமிடத்தில் பெங்களரு அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது  மட்டுமின்றி இறுதியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதையெடுத்து நடைபெற்ற 3வது போட்டியில் சண்டிகர் சிஐஎஸ்எப் அணியுடன் பெங்களுரு கனரா வங்கி அணி மோதியது. போட்டி தொடக்கத்தின் முதல் கனரா வங்கி அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 15, 28, 40, 51வது நிமிடங்களில் கோல்கள் அடித்தது. சண்டிகர் அணி பதிலுக்கு 59 நிமிடத்தில் ஒரே ஒரு கோல் மட்டும் அடித்தது.இறுதியில் 4 – 1என்ற கோல் கணக்கில் பெங்களரு கனராவங்கி அணி வெற்றி பெற்றது.

இன்று (18.05.19) நடைபெறும் முதல் போட்டியில் சவுத் சென்ட்ரல் ரயில்வே, செகந்தராபாத் அணியும், சென்னை ஐசிஎப் அணி மோதுகின்றன. 2வது போட்டியில் தெற்கு இரயில்வே, சென்னை அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடெமி அணியும் மோதுகின்றன. 3வது போட்டியில் ஆல் இந்தியா கஸ்டம்;- ஜிஎஸ்டி, மும்பை அணியும், இந்தியன் வங்கி, சென்னை அணியும் மோதுகின்றன.

Photo FTP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.