ETV Bharat / state

அகில இந்திய ஹாக்கி போட்டி: பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சாம்பியன்

தூத்துக்குடி: அகில இந்திய ஹாக்கி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி சேம்பியன்
author img

By

Published : May 27, 2019, 1:14 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம், கல்வி அறக்கட்டளை, கே.ஆர். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி சார்பில் 11ஆவது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 16ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. இதில், 16 அணிகள் பங்கேற்றன.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி, செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், 5-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

பரிசளிப்பு விழாவில், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சின்னப்பன் வெற்றிபெற்ற பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணிக்கு ஒரு லட்ச ரூபாயும், லட்சுமி அம்பாள் நினைவுக் கோப்பையும் வழங்கினார்.

மேலும், இரண்டாவது இடம் பிடித்த செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணிக்கு ரூ.75 ஆயிரமும், மூன்றாவது இடம் பெற்ற சென்னை ஐ.சி.எஃப். அணிக்கு ரூ.50 ஆயிரமும், நான்காவது இடம் பிடித்த மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி. அணிக்கு ரூ.30 ஆயிரமும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டன.

கோவில்பட்டியில் நடந்து வந்த அகில இந்திய ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி வெற்றி பெற்று, லட்சுமி அம்பாள் நினைவு கோப்பையை கைப்பற்றியது.

கோவில்பட்டி, கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 11-வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

கோவில்பட்டி செயற்கை புல்வெளியில் நடந்த போட்டிகள், கால் இறுதி ஆட்டம் வரையில் லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடத்தப்பட்டன.

இறுதி போட்டி நேற்று நடந்தது. மாலை 5.30 மணிக்கு 3 மற்றும் 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், சென்னை ஐ.சி.எப். அணியும், மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி. அணியும் மோதின. இதில் 5 - 2 என்ற கோல் கணக்கில் சென்னை ஐ.சி.எப். வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது. போட்டிக்கு அமித் ஷையினி, சுரேஷ்குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இறுதி போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணியுடன், செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணி மோதியது. இதில் 5 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன் அணிக்கு ரூ.ஒரு லட்சம், லட்சுமி அம்பாள் நினைவு கோப்பை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த செகந்திரபாத் சவுத் சென்டரல் ரயில்வே அணிக்கு ரூ.75 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற சென்னை ஐ.சி.எப். அணிக்கு ரூ.50 ஆயிரமும், 4-வது இடம் பிடித்த மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி. அணிக்கு ரூ.30 ஆயிரமும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.