ETV Bharat / state

ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி: பெரியதாழையில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

ரூ.30 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர்!

author img

By

Published : Nov 18, 2020, 7:43 PM IST

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். பெரியதாழை கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அலை சீற்றத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்பட்டுவருகிறது.

இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரையடுத்து கடந்த ஐந்தாண்டுகளில் ரூ. 25 கோடியில் மேற்கு பகுதியில் 800 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனால், குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகரிப்பால் கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படுவதால் படகுகளை நிறுத்த முடியாத நிலை உருவானது.

இதனைத்தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையின் படி பெரியதாழை கடல் மேற்கு பகுதியில் 360 மீட்டர் அளவிலும், கிழக்கு பகுதியில் 240 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவை மேலும் நீட்டித்து அமைக்க, திட்டமிடப்பட்டு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரியதாழையில் தூண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பெரியதாழையில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டிலான தூண்டில் பாலம் அமைக்கும் பணியினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று (நவ. 18) தொடங்கி வைத்தார். முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியன்பட்டினம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு தடுப்புச் சுவர் அமைக்க கூடுதலாக ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.

இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,

“தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை வரை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. நபார்டு திட்டத்தின் கீழ் பெரியதாழையில் ரூ. 30 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ளது.

மேலும் ஆலந்தழையில் ரூ. 40 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவிற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து சுற்றுச்சூழல் துறை அனுமதிக்காக அனுப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் பணி தொடங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.