தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் தலைக்கவசம் அணிவதை ஊக்குவிப்பதற்காக திருச்செந்தூர் காவலர்கள், பெட்ரோல் சேமிப்பு நிலைய உரிமையாளர்கள் இணைந்து தலைக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இது ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாதத்தில் ஒரு நாள் மகிழ்ச்சி நாள் என அறிவிக்கப்பட்டு, திருச்சந்தூரைச் சுற்றியுள்ள 13 பெட்ரோல் சேமிப்பு நிலையத்துக்கு காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை முதலில் தலைக்கவசம் அணிந்து வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.