தூத்துக்குடி: கனமழை பாதிப்புகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. மிகவும் மோசமான நிலைமை, தாமிரபரணி ஆற்றில் பயங்கர வெள்ளம் என கரையோர கிராமங்களுக்குப் பேராபத்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் 15 கிராமங்களில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரையில் இல்லாத வகையில், சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் வரை வெள்ளம் வர உள்ளதால் தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களை உடனே கிராமங்களை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சமடைய நெல்லை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளில் யாரும் இருக்க வேண்டுமெனவும், இதுவரையில் இல்லாதவாறு காட்டாற்று வெள்ளத்தைப் போல வரவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகவே, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள அனைத்து கிராமத்தினரும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என தெரியவருகிறது.
இதையும் படிங்க: South TN Rain Live Update:எந்தெந்த பகுதிக்கு 'ரெட் அலர்ட்'..தென்மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை..நிலவரம் என்ன?