ETV Bharat / state

தேர்தல் பாதுகாப்பு :  அஸ்ஸாமிலிருந்து தூத்துக்குடி வந்த எல்லை பாதுகாப்புப் படை!

author img

By

Published : Mar 2, 2021, 1:54 AM IST

தூத்துக்குடி: தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அஸ்ஸாமிலிருந்து எல்லை பாதுகாப்புப் படையினர் ரயில் மூலமாக நேற்று (மார்ச் 01) தூத்துக்குடியை வந்தடைந்தனர்.

அணிவகுப்பில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படையினர்

தூத்துக்குடியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் தேர்தல் கண்காணிப்புப் பறக்கும் படை குழுக்கள், நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு பாதுகாப்புப் பணிக்காக அஸ்ஸாமிலிருந்து எல்லை பாதுகாப்புப் படையினர் ரயில் மூலமாக நேற்று (மார்ச் 1) தூத்துக்குடி வந்தனர். அவர்களது வருகையையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பு பனிமயமாதா கோவில் முன்பு நிறைவடைந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், “தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக அஸ்ஸாமிலிருந்து 90 எல்லை பாதுகாப்புப் படையினர் தூத்துக்குடி வருகை தந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அவர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படை , ஆயுதப் படையைச் சேர்ந்த காவல் துறையினரும் இவர்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக துணை ராணுவப் படையினரும் தூத்துக்குடிக்கு வரவழைக்கப்பட உள்ளனர். மாவட்டத்தைச் சுற்றி 13 இடங்களில் பாதுகாப்பிற்காக சோதனைச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க உறுதி ஏற்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரத்தில் குவிந்த துணை ராணுவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.